'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கரண் ஜோஹர் இயக்கத்தில், பிரீதம் இசையமைப்பில், ரன்வீர் சிங், ஆலியா பட், ஜெயா பச்சன், ஷபனா ஆஸ்மி, தர்மேந்திரா மற்றும் பலர் நடிக்கும் ஹிந்திப் படமான 'ராக்கி ஹவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தின் டிரைலர் இன்று வெளியானது. டிரைலரைப் பார்த்ததுமே 1999ம் ஆண்டில் வெளியான தமிழ்ப் படங்களான 'பூவெல்லாம் கேட்டுப்பார், ஜோடி' ஆகிய படங்கள்தான் ஞாபகத்திற்கு வருகிறது.
இரண்டு படங்களின் கதைகளுமே ஒரே கதைகள்தான். காதலர்கள் தங்களது பெற்றோர்களின் சம்மதத்தைப் பெற காதலன் வீட்டில் காதலியும், காதலி வீட்டில் காதலியும் ஒரு காரணத்தைச் சொல்லி நுழைந்து அவர்களது மனதில் இடம் பிடிக்க முயற்சிப்பதுதான் இரண்டு படங்களின் கதை.
அதே கதையைத்தான் இப்போது கரண் ஜோஹர் ''ராக்கி ஹவுர் ராணி கி பிரேம் கஹானி' என பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார். படத்தில் கதாநாயகன் ரன்வீர் பஞ்சாபி பையனாகவும், ஆலியா பொங்காலி பெண்ணாகவும் நடித்திருக்கிறார்கள். இந்தக் கால பாலிவுட் ஸ்டார்கள், அந்தக் கால பாலிவுட் ஸ்டார்கள், கரண் ஜோஹரின் இயக்கம் ஆகியவைதான் இந்தப் படத்திற்கு பிளஸ் ஆக அமையப் போகிறது என்பது டிரைலரைப் பார்த்ததும் தெரிய வருகிறது.
1999ல் தமிழில் வெளியான 'ஜோடி, பூவெல்லாம் கேட்டுப்பார்' ஆகிய இரண்டு படங்களுமே பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அவற்றின் தழுவலாக 24 வருடங்களுக்குப் பிறகு வரப் போகும் இந்த ஹிந்திப் படம் எப்படி வரவேற்பைப் பெறப் போகிறது என்பது படம் வெளியாகும் ஜுலை 28 அன்று தெரிய வரும்.