கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
கடந்த 2016ம் ஆண்டில் அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன் நடித்து வெளிவந்த திரைப்படம் தெறி. இந்த படம் விமர்சன ரீதியாக மற்றும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு தெலுங்கில் இயக்குனர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் நடிகர் பவன் கல்யாண் உஷ்டாத் பகத் சிங் படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து தெறி ஹிந்தியில் ரீமேக் செய்வதாக கூறப்படுகிறது. அதன்படி, அட்லீ பிரபல ஹிந்தி தயாரிப்பாளர் முராத் கெதானி உடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார். பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் வருண் தவானின் 18வது படமாக உருவாகிறது. இப்படத்தை இயக்குனர் காளிஸ் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு தமிழில் கீ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருட ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கி அடுத்த வருட மே மாதத்தில் இந்த படத்தை வெளியீட படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது .