நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் 'ஆதிபுருஷ்'. 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி உள்ள இந்த படத்தில் ராமன் இலங்கை சென்று சீதையை மீட்டு வந்த பகுதியை கதையாக கொண்டது. இதில் ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோனன், ராவணனாக சைப் அலிகான் நடித்திருந்தனர். படத்தின் தொழில்நுட்ப தரம் சரியில்லை. ராமாயண கேரக்டர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் படத்தில் இடம் பெற்றுள்ள சில வசனங்களும் புண்படுத்துவதாக உள்ளது என சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில் ஆதிபுருஷ் படம் பற்றி பொதுமக்கள் புகார் அளித்தால் அதுபற்றி அரசு யோசிக்கும் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகேல் கூறியிருக்கிறார். இது தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ள அவர் கூறியிருப்பதாவது:
நம்முடைய எல்லா தெய்வங்களுக்கும் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி நடக்கிறது. ராமரின் மென்மையான முகத்தையும், ஹனுமான் பக்தியில் மூழ்கியதையும் நாங்கள் பார்த்தோம், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த உருவத்தை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுவயதிலிருந்தே ஹனுமான் ஞானம், சக்தி மற்றும் பக்தியின் அடையாளமாக அறிமுகப்படுத்தப்படுகிறார், ஆனால் இந்த படத்தில், ராமர் போர் வீரனாகவும், ஹனுமான் கோபமான விலங்காகவும் காட்டப்படுகிறார்.
இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வசனங்களும் மொழியும் அநாகரீகமாக உள்ளது. 'ஆதிபுருஷ்' படத்தில், கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளன. ராமர் மற்றும் ஹனுமனை மோசமாக சித்தரித்துள்ள இப்படத்திலிருந்து இளம் தலைமுறையினர் என்ன கற்றுக்கொள்வார்கள்?. மக்கள் கோரிக்கை எழுப்பினால், அரசாங்கம் படத்திற்கான தடை குறித்து சிந்திக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.