செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு |
பாலிவுட் படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடிப்பவர் கெஹானா வசிஸ்த். 'பில்மி துனியா' என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் அதன்பிறகு அய்து, பீச் லவ் ஸ்டோரி, நமஸ்தே, உள்ளிட்ட தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்தார். பாலிவுட் படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தார். ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடிவந்தார். தமிழில் 'பேய்கள் ஜாக்கிரதை' படத்தில் நடனம் ஆடினார்.
சமூக வலைத்தளத்தில் பிசியாக இருக்கும் இவர் உள்ளாடை விளம்பர படங்களில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். சுமார் 80 விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் கெஹானா வசிஸ்துக்கும், பைஸான் அன்சாரி என்பவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்தனர். தற்போது இருவரும் திடீரென திருமணம் செய்து கொண்டனர். திருமண புகைப்படங்கள் வலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. திருமணம் செய்து கொண்ட கெஹானா வசிஸ்துக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.