நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் 'வாடிவாசல்' | ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! |
பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் ஹிந்தி டிவி தொடர்கள் மூலம் பிரபலமானவர் மங்கள் தில்லான். 1986ம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான 'புனியாட்' மற்றும் 1988ம் ஆண்டு ஒளிபரப்பான 'கூன் பாரி மாங்' ஆகிய தொடர்களின் மூலம் இவர் பிரபலமடைந்தார். அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர், மீண்டும் 1993ம் ஆண்டு ஒளிபரப்பான 'ஜுனூன்' தொடரில் இடம்பெற்றார்.
'பியார் கா தேவ்தா', 'ரன்பூமி', 'ஸ்வர்க் யஹான் நர்க் யஹான்', 'விஷ்வாத்மா', 'தில் தேரா ஆஷிக்', 'ட்ரெய்ன் டு பாகிஸ்தான்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் மங்கள் தில்லான் நடித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்வு தில்லானுக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர், சமீபத்தில் உடல்நலக்குறைவால் பஞ்சாபில் உள்ள லூதியானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக உடல்நிலை மோசமடையவே இன்று (ஜூன் 11) சிகிச்சை பலனின்றி மங்கள் தில்லான் காலமானார். அவருக்கு வயது 78. அவரது மறைவுக்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.