கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… | ஆமிர்கான் படத்திற்கு மகேஷ்பாபு பாராட்டு |
மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இப்படிப்பட்ட படங்களைத்தான் இவர் இயக்குவார் என ஒரு வட்டத்துக்குள் தன்னை அடைத்துக் கொள்ளாமல் மோகன்லால் நடித்த உதயநாணுதாரம், பிரித்விராஜ் நடித்த மும்பை போலீஸ், நிவின்பாலி நடித்த வரலாற்று படமான காயங்குளம் கொச்சுண்ணி மற்றும் மலையாளத்தில் மஞ்சு வாரியருக்கும், தமிழில் ஜோதிகாவுக்கும் வெற்றிகரமான மறு பிரவேசத்துக்கு வழிவகுத்த ஹவ் ஓல்ட் ஆர் யூ (தமிழில் 36 வயதினிலே) என விதவிதமான ஜானர்களில் படங்களை இவர் இயக்கி உள்ளார்.
இந்தநிலையில் மலையாளம் தமிழ், இரண்டு மொழிகளையும் தாண்டி முதன்முறையாக பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ். இந்தியில் அவர் இயக்கும் படத்தில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடித்து வருகிறார். கதாநாயகியாக பூஜா ஹெட்டே நடிக்கிறார். இதற்கு முன்பு ஷாகித் கபூர் நடிப்பில் வெளியான பிளடி டாடி என்கிற படம் வெற்றி படமாக அமைந்தது. அந்த படத்திற்கு 40 கோடி சம்பளம் வாங்கி இருந்தாராம் ஷாகித் கபூர்.
ஆனால் தற்போது ரோஷன் ஆண்ட்ரூஸ் படத்திற்காக 15 கோடி குறைத்துக் கொண்டு வெறும் 25 கோடி மட்டுமே சம்பளமாக பெற்றுக் கொண்டாராம் ஷாகித். அதற்கு காரணம் இது குறுகிய கால தயாரிப்பாக உருவாவதாலும் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் மீது ஷாகித் கொண்டிருந்த மரியாதையாலும் தான் என்கிறார்கள் பாலிவுட் வட்டாரத்தில்.