நடிப்பும், எழுத்தும் எனது இரு கண்கள்: 'லோகா' எழுத்தாளர் சாந்தி பாலச்சந்திரன் | சரோஜாதேவி, விஷ்ணுவர்தனுக்கு கர்நாடக ரத்னா விருது | பிகினிக்கு வயது ஒரு தடையா ? நோ… | தீபாவளி போட்டியில் 'காந்தா' ? | 14 ஆண்டுகளுக்கு பிறகு தயாராகும் ‛உருமி' இரண்டாம் பாகம் | விருஷபா டப்பிங்கை முடித்த மோகன்லால் | ஜப்பானிய பாரம்பரிய உடை அணிந்து ஜப்பான் சாலைகளில் வலம் வந்த மஞ்சு வாரியர் | முதன்முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கும் பார்வதி | ஒரே நேரத்தில் ரஜினி விஜய் படங்களில் நடித்த இரட்டிப்பு சந்தோஷத்தில் மோனிஷா பிளஸ்சி | விக்ரமின் அடுத்த மூன்று படங்கள் குறித்து தகவல் இதோ |
பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா, 2008ம் ஆண்டு ரப் நே பனா தி ஜோடி என்ற படத்தில் அறிமுகமானவர். அமீர்கானுடன் நடித்த பிகே என்ற படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார். அதோடு தயாரிப்பாளராகவும் உருவெடுத்த அனுஷ்கா, 2017ல் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை திருமணம் செய்து கொண்ட பிறகு அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார். தற்போது கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் சக்தா எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா. சமீபத்தில் தான் அளித்த ஒரு பேட்டியில் அவர் கூறும்போது, ‛‛சினிமாவில் நடிப்பதை மிகவும் ரசிக்கிறேன். அதே நேரம் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சம அளவில் நேரத்தை செலவிட ஆசைப்படுகிறேன். முக்கியமாக குடும்பம் மற்றும் குழந்தை வளர்ப்பிலும் அதிகப்படியான கவனம் செலுத்தப் போகிறேன். அதனால் இனிமேல் முன்பு நடித்தது போன்று அதிக படங்களில் நடிக்கப் போவதில்லை. வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே நடிக்கப் போகிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார் அனுஷ்கா.