லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
பாலிவுட் தயாரிப்பாளர் விபுல்ஷா தயாரிப்பில் மேற்குவங்க இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'தி கேரளா ஸ்டோரி'. அடா சர்மா, சித்தி இத்னானி உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையை கொண்ட இந்தப் படத்துக்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆனால் வட மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு இந்த படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் 37 நாடுகளில் திரையிடப்பட்டது. இந்த நிலையில் படம் வெளியாகி 18 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் உலகம் முழுவதும் படம் 203 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான படம் 200 கோடியை தாண்டி வசூலித்திருப்பது திரையுலகில் ஆச்சர்ய அலைகளை ஏற்படுத்தி உள்ளது.