டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் | பயில்வான் அசிங்கமானவர்! பப்லு பிருத்விராஜ் ஆவேசம் | ரூ.600 கோடி கிளப்பில் இணைந்த அனிமல் படம்! | ரஜினி பிறந்தநாளில் ஸ்டார் படத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | விஜய் சேதுபதி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | கே.எஸ் ரவிக்குமார் ஒரு கோழை ; முன்னாள் அமைச்சர் காட்டம் | மோகன்லாலின் படத்தில் அறிமுகமாகும் நடிகையின் மகள் | தொடர் தோல்விகளால் தடுமாறும் நயன்தாரா |
கோல்கட்டாவில் உள்ள கர்தா பகுதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஷிவானிக்கு நேற்று முன்தினம் செல்போனில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. போனில் வீடியோ காலில் பேசியவர் ஷாருக்கான். ஷிவானி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விழிப்பில் இருக்கிறார். தான் மரணமடைவதற்குள் ஷாருக்கானை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று உள்ளூர் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி ஷாருக்கானின் கவனத்துக்கு செல்ல, அவரே வீடியோகாலில் அழைத்து ஷிவானியுடன் பேசினார். அதோடு ஷிவானியின் மருத்துவ செலவையும் ஏற்பதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இது தொடர்பாக ஷிவானியின் மகள் ப்ரியா கூறும்போது, “என் தாயார் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக ஷாருக்கான் தெரிவித்தார். மேலும், அவர் என்னுடைய திருமணத்திற்கு வருவதாகவும், கோல்கட்டாவில் உள்ள வீட்டிற்கு நேரில் வருவதாகவும் கூறினார்". என்றார்.