ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜவான். ஷாருக்கான் நடித்து திரைக்கு வந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற பதான் படத்தை அடுத்து வெளியாகும் படம் என்பதால் இந்த ஜவான் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ஷாருக்கான், ஜவான் படத்தின் வெளியிட்டு தேதியில் ஏற்பட்ட மாற்றம் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், ரசிகர்களுக்கு நேர்த்தியும் தரமும் மிக்க படைப்பை வழங்க பட குழுவினருக்கு பொறுமையும், கால அவகாசமும் தேவை என்று கூறியுள்ளார்.
அதையடுத்து ஜவானில் மிகவும் பிடித்தது எது? என்று அவரிடத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு, என்னை பொறுத்தவரை இது ஒரு புதுமையான படைப்பு. இயக்குனர் அட்லி வித்யாசமாக இரண்டு ஷாருக்கானை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்த படத்தை பொருத்தவரை அட்லியும், அவரது குழுவினரும்தான் மாஸ். அவர்களது ஸ்டைல் மற்றும் அணுகுமுறை தான் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது.
ஜவான் பட போஸ்டரில் உங்களை காணவில்லையே? என்று இன்னொரு ரசிகர் கேட்ட கேள்விக்கு, ஷாருக்கானின் பெயர் மட்டும் போதும் என தயாரிப்பாளர் உணர்ந்து இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
நயன்தாரா குறித்து ஷாருக்கான் கூறுகையில், நயன்தாரா மிகவும் அழகானவர் இனிமையானவர். அவருடன் பணியாற்றியது சவுகரியமாக இருந்தது. அதேபோல் விஜய் சேதுபதி அடக்கமான மனிதர், சிறந்த நடிகர். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ள ஷாருக்கான், இந்த படத்தில் அட்லியும், அனிருத்தும் தன்னை தமிழில் சில பாடல் வரிகளை பாட வைத்திருப்பதாகவும், அந்த வரிகளை சரியாக உச்சரித்திருப்பதாக நான் நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்த ஜவான் படத்தில் ஷாருக்கான் தமிழில் பின்னணி பாடியிருப்பது தெரியவந்துள்ளது.