அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
ஹிந்தி நடிகர் ஷாருக்கான் நடிப்பில் நம்ம ஊர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் படம் ஜவான். இப்படத்தில் நயன்தாரா, பிரியா மணி , விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிரூத் இசையமைக்கிறார். ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ஜூன் 2 அன்று இந்த படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர் . இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் மீதம் உள்ளதால் தள்ளி வெளியாகும் என தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்துள்ளனர். அதன்படி, இப்படம் வரும் செப்டம்பர் 7 அன்று உலகமெங்கும் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று போஸ்டர் உடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.