முதல்வரின் வேண்டுகோளை கண்டிப்பா நிறைவேற்றுவேன்: இளையராஜா | மதராஸி, லோகா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியானது! | 'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி! | கும்கி- 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட பிரபு சாலமன்! | ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி! | பிளாஷ்பேக்: பல முதன்மைகளை உள்ளடக்கிய முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் | நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! | அமீர்கான் மகன், சாய் பல்லவி படத்தின் புதிய தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி இதோ! |
கடந்த 2005ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் கஜினி. கதாநாயகிகளாக அசின், நயன்தாரா ஆகியோர் நடித்து இருந்தனர். தமிழில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்படம் ஹிந்தியில் அமீர்கான் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் ரீமேக் செய்து மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
சில வருடங்களாக அமீர்கான் நடித்த திரைக்கு வந்த எந்த படமும் வெற்றி பெறவில்லை. இதனால் நடிப்பில் இருந்து கொஞ்ச காலம் ஓய்வு எடுத்து குடும்பத்தினரோடு நேரத்தை செலவிட இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
தற்போது தனது அடுத்த படத்திற்காக நிறைய இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார். ஆனால், எந்த கதையிலும் திருப்தி இல்லை என்பதால் இப்போது கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க முடிவு செய்து இருக்கிறார். இதற்கான திரைக்கதை தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் உடன் கஜினி இரண்டாம் பாகம் எடுப்பது குறித்து அமீர்கான் பேசி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.