தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் | பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை | ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் |
தமிழில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த படம் வீரம். இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தற்போது சல்மான்கான் நடித்துள்ளார். கிசி கா பாய் கிசி கி ஜான் என்று அந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, பாக்யஸ்ரீ, வெங்கடேஷ், விஜயேந்தர் சிங் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஏப்ரல் 21 ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஏப்ரல் பத்தாம் தேதியான நேற்று இரவு 9 மணிக்கு மும்பையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறிக்கை ஒரு மிரட்டல் போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், தன்னை ஜோத்புரி சேர்ந்த கவுரசத் ராக்கி பாய் என்று கூறிக்கொண்டு ஏப்ரல் 30ம் தேதி அன்று சல்மான்கானை நான் கொன்று விடுவேன் என்று தெரிவித்திருக்கிறார். இந்த செய்தி பாலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த நபரை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.