சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
2000ல் பாலிவுட்டில் நடிகர் ஹிரித்திக் ரோஷன் கதாநாயகனாக அறிமுகமான கஹோ நா பியார் ஹை என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அமிஷா பட்டேல். தமிழில் விஜய் நடித்த புதிய கீதை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததும் இவர்தான். கடந்த 2010 வரை ஆக்டிவாக படங்களின் நடித்து வந்த இவர் கடந்த 15 வருடங்களில் வெறும் ஐந்து படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் மீது செக் மோசடி வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தால் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ல் இவர் தனது பார்ட்னர் ஒருவருடன் சேர்ந்து தேசி மேஜிக் என்கிற படத்தை தயாரிப்பதற்காக இரண்டரை கோடி ரூபாய் கடனாக வாங்கினார் என்றும், இப்போது வரை அதை திருப்பி செலுத்தவில்லை என்றும் ஜார்க்கண்ட்டை சேர்ந்த அஜய் குமார் சிங் என்கிற தயாரிப்பாளர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு 2018ல் ஏற்பட்ட சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரண்டரை கோடிக்கும், பின்னர் 50 லட்சத்திற்கும் என இரண்டு காசோலைகளை கொடுத்தார் அமிஷா பட்டேல்.
ஆனால் அவற்றை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை எனத் திரும்பி விட்டது. இதையடுத்து அவர் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார் அஜய் குமார் சிங். இதை தொடர்ந்து நீதிமன்றத்தில் பலமுறை ஆஜராக சம்மன் அனுப்பியும் அபிஷா பட்டேல் அதை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு வரும் ஏப்-15ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அவருக்கு வாரண்ட் அனுப்பப்பட்டுள்ளது.