'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இந்தியா, கிரிக்கெட்டில் உச்சம் தொட்டாலும், கால்பந்து அதற்கு வெறும் கனவாகவே இருந்து வருகிறது. ஆனால் இந்தியா சுதந்திரமடைந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1952ம் ஆண்டு பின்லாந்தில் நடந்த சம்மர் ஒலிம்பிக் போட்டியில் இந்திய கால்பந்து அணி கலந்து கொண்டு விளையாடி இருக்கிறது. அந்த போட்டியில் இந்தியா தோற்றாலும் அது வரலாற்று சிறப்பு மிக்க காலம். அதன்பிறகு அவ்வளவு வலுவான கால்பந்து அணி இந்தியாவில் உருவாகவில்லை. அதனை அடிப்படையாக கொண்டு தயாராகி உள்ள படம்தான் 'மைதான்'.
இந்த படத்தில் அஜய் தேவ்கன், பிரியாமணி, கஜராஜ் ராவ், பெங்காலி நடிகர் ருத்ரனில் கோஷ் ஆகியோர் நடித்துள்ளனர். அமித் ரவீந்தர்நாத் ஷர்மா இயக்கி உள்ளார். ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூர், அருணவா ஜாய் சென்குப்தா மற்றும் ஆகாஷ் சாவ்லா ஆகியோர் தயாரித்துள்ளனர். சைவின் குவாட்ராஸ் மற்றும் ரித்தேஷ் ஷா ஆகியோர் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளனர். படத்திற்கு இசை ஏஆர் ரஹ்மான். இப்படம் ஜூன் மாதம் 23ம் தேதி வெளியாகிறது.