மூன்று மொழிகளில் உருவாகும் படம் 'ஓம் சிவம்' | அக்டோபர் 25ல் வெளிவரும் 'வெனம்' கடைசி பாகம் | பிரபு, வெற்றி நடிக்கும் அப்பா மகன் படம் | தெலுங்கு தமிழில் வெளியாகும் சமுத்திரக்கனி படம் | விஜய் 69-வது படத்தின் டெக்னீசியன் விவரம் வெளியானது | கவுதம் கார்த்திக் பிறந்தநாளில் வெளியான 19வது படத்தின் அறிவிப்பு | நவம்பர் 29ல் ஜப்பானில் வெளியாகும் ஷாருக்கானின் ஜவான் | பாலியல் குற்றச்சாட்டில் பிரித்விராஜ் உதவி இயக்குநர் சரண்டர் | ஆண் நடிகரின் பாலியல் குற்றச்சாட்டு பொய் : இயக்குனர் ரஞ்சித்தின் வழக்கறிஞர்கள் ஆதாரம் | தயாரிப்பாளர் சங்க தலைமையை மாற்ற வேண்டும் : பெண் தயாரிப்பாளர் போர்க்கொடி |
ஆடுகளம் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டாப்ஸி. இந்த பதினைந்து வருடங்களில் மிகப்பெரிய அளவில் தனது கேரியரில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். தெலுங்கு படத்திலும் நடித்துள்ள அவர் இப்போது ஹிந்தியில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், சரியான உணவு முறைகளை பின்பற்றுவதற்காக தனது டயட்டீஷியனுக்கு மாதம் ரூ.1 லட்சம் தருவதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகை கங்கனாவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் டாப்ஸியிடம், கங்கனா ரனாவத்தை நேரில் சந்தித்தால், என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛கங்கனாவை பார்த்தால் வணக்கம் சொல்வேன். அவருடன் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவருக்குதான் என்னுடன் பிரச்னை இருக்கிறது. அது அவரது விருப்பம். அவர் என்னை என்ன சொன்னாலும், அதை எனக்கான பாராட்டாகவே எடுத்துக்கொள்கிறேன்' என்றார்.
கங்கனாவும், டாப்ஸியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோசியல் மீடியாவில் கடுமையாக மோதிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.