தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' | சூர்யாவின் கங்குவா ரிலீஸ் - இரண்டு தேதிகளை திட்டமிடும் படக்குழு! | டிசம்பரில் வெளியாகும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி! | கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் அஜித்தின் விடாமுயற்சி! | வாழை படத்தின் இரண்டாம் பாகம்! - மாரி செல்வராஜ் தகவல் | பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய், ரஜினி! |
பெங்களூரைச் சேர்ந்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் பல மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திகார் சிறையில் இருந்து கொண்டே தொழில் அதிபர்களிடம் 200 கோடி மோசடி செய்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த மோசடியில் அவருக்கு உதவி செய்ததாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டசும் விசாரணை வளைத்தில் உள்ளார்.
இதற்கிடையில் சுகேசும், ஜாக்குலினும் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளிவந்தது. “என்னை காதலித்ததை தவிர ஜாக்குலின் வேறு எந்த தவறும் செய்யவில்லை” என்று சுகேஷ் வெளிப்படையாகவே கூறினார்.
சமீபத்தில் தசரா பண்டிகைக்கு ஜாக்குலினுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய சுகேஷ் “உன்னை நான் காப்பாற்றுவேன். உன் மகிழ்ச்சியை திரும்ப பெற்றுத் தருவேன். உனக்காக எந்த எல்லைக்கும் செல்வேன்” என்று உருக உருக காதல் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் சுகேஷ், ஜாக்குலின் காதல் கதையை திரைப்படமாக எடுக்க உள்ளார் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஆனந்த் குமார். “சுகேஷ் எப்படி நெட்வொர்க்குகளை உருவாக்கி மோசடிகள் செய்தார். பாலிவுட் பிரபலங்கள் இதில் சிக்கியது எப்படி போன்றவற்றுடன் சுகேஷ் - ஜாக்குலின் காதல் உள்ளிட்டவைகளையும் அடக்கி இந்த படம் உருவாகிறதாம். இதுதொடர்பாக திகார் சிறை அதிகாரியை சந்தித்து சுகேஷ் பற்றிய விவரங்களை ஆனந்த் குமார் சேகரிக்க உள்ளாராம். இது சினிமா படமாகவோ அல்லது வெப் தொடராகவோ வெளிவர வாய்ப்புள்ளது.