'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? | அஜித், தனுஷ் கூட்டணியை உறுதி செய்த தயாரிப்பாளர்! | சல்மான்கான் சொன்ன கதைக்கு மறுப்பு தெரிவித்து ஏ.ஆர். முருகதாஸ்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தின் புதிய அப்டேட்! | பாவனாவின் வருஷம் 14! | முதல் பாகத்தில் இறந்தேன்.. 2ம் பாகத்தில் நடித்துள்ளேன் ; எம்புரான் நடிகர் வைக்கும் டுவிஸ்ட் | 15 கோடி கேட்கும் ரவுடி பேபி | ‛கட் அண்டு ரைட்'டாக பேசும் நடிகை | 'இன்ஸ்டன்ட் ஹிட்' ஆன 'ரெட்ரோ' கனிமா….. | 'மதராஸி' படப்பிடிப்பு எப்போது முடியும்? |
பாலிவுட் நடிகைகளாக இருந்தாலும் இயக்குனர் மணிரத்னத்தின் டைரக்ஷனில் ஒரு படமாவது நடித்து விட வேண்டும் என்பது அவர்களது மிகப்பெரிய ஆசையாக இருக்கும். அதேபோல இயக்குனர் மணிரத்னமும் தனது படங்களில் ஐஸ்வர்யா ராய், மனிஷா கொய்ராலா என மும்பை நடிகைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடிக்க வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்படி பாலிவுட் நடிகை கஜோலையும் ஷாருக்கானை வைத்து தான் இயக்கிய ‛தில்சே' என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்க அழைப்பு விடுத்தார் மணிரத்னம்.
ஆனால் மணிரத்னம் கேட்ட தேதிகளை ஒரு அறிமுக இயக்குனரின் படத்தில் நடிப்பதற்காக முன்கூட்டியே கொடுத்து விட்டதால், தில்சே பட வாய்ப்பை நிராகரித்து விட்டார் கஜோல். அந்த அறிமுக இயக்குனர் வேறு யாருமல்ல, தற்போது பாலிவுட் சினிமாவின் முக்கிய சூத்திரதாரியாக வலம் வரும் இயக்குனர் கரண் ஜோஹர் தான்.
ஆம்.. கரண் ஜோஹர் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமான ‛குச் குச் ஹோத்தா ஹை' என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார் கஜோல். அதற்கு முன்பிருந்தே இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களும் கூட. அந்த சமயத்தில் தான் மணிரத்னம் பட வாய்ப்பு கஜோலை தேடி வந்தது. இத்தனைக்கும் மணிரத்னம் படத்தில் ஒருமுறையாவது நடித்துவிட வேண்டும் என்பது தனது கனவு என்று கரண் ஜோஹரிடமும் பலமுறை கூறியுள்ளார் கஜோல்.
இதை அறிந்த கரண் ஜோஹர் மணிரத்னம் படத்தில் நடித்துவிட்டு வருமாறும் அதன்பிறகு, தனது படத்தை துவங்குவதாகவும் கூறி அவருக்கு அட்வைஸ் செய்துள்ளார். ஆனால் கஜோல் பிடிவாதமாக மறுத்துவிட்டு கரண் ஜோஹர் படத்தில் தான் நடித்தார். அந்த படமும் மிகப்பெரிய ஹிட் ஆகி இருவரது திரை உலக பயணத்திலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து கபி குஷி கபி கம் மற்றும் மை நேம் இஸ் கான் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் கூட்டணி சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கரண் ஜோஹரே கூறியுள்ளார்.