நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பெங்களூருவில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண் வசுந்தரா தாஸ். ஆறு வயது முதல் பாடத்தொடங்கியவர் பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் பாடி வந்தார். பின்னர் தனி ஆல்பங்களில் பாடியவர் தமிழ் திரைப்படங்களில் பாடுவதற்காக சென்னை வந்தார். ஆனால் அவர் பாடுவதற்கான வாய்ப்பை விட நடிப்பதற்காகவே அதிக வாய்ப்புகள் வந்தது. இதனால் நடிக்கவும் அவர் தயாரானார்.
முதன்முதலில் அவர் நடிப்பதற்காக ஆடிஷன் சென்றது 'அலைபாயுதே' படத்திற்காக. ஆனால் அந்தப் படத்தில் நடிக்க அவர் தேர்வாகவில்லை. தான் எதிர்பார்க்கும் எளிய தோற்றம் வசுந்தராவிடம் இல்லை என்றும், அவரிடம் ஒரு ரிச் லுக் இருப்பதாகவும் மணிரத்னம் கூறிவிட்டார். அதன் பிறகு அவர் 'ஹேராம்' படத்தில் நடிப்பதற்கு தேர்வானார். காரணம் வடநாட்டு பெண் என்பதால் அந்த தோற்றத்திற்கு அவர் சரியாக இருப்பதாக கமல் கருதி வாய்ப்பளித்தார்.
என்றாலும் ஏ ஆர் ரஹ்மான் அவருக்கு 'முதல்வன்' படத்தில் 'சக்கலக்க பேபி' பாடல் பாடும் வாய்ப்பு அளித்தார். அஜித் நடித்த 'சிட்டிசன்' படத்தில் நடித்த அவர் மற்ற மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்தாலும் நடிகையாக அவர் ஜெயிக்கவில்லை. ஆனால் பாடகியாக நிலை நிறுத்திக் கொண்டார்.