இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி | பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? |
1950ம் ஆண்டு முதல் 1954ம் ஆண்டு வரை, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய 'பொன்னியின் செல்வன்' கதை, வார இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களின் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர், 5 பாகங்கள் கொண்ட புத்தகமாகவும் வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகத்தின் வியாபாரமும் விண்ணைத் தொட்டது. சோழ தேசத்தில் நடக்கும்படியாக எழுதப்பட்ட இந்தக் கதைக்குள் இருந்த சுவாரஸ்யத்தை உணர்ந்த எம்.ஜி.ஆர், 1958ம் ஆண்டு, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து 'பொன்னியின் செல்வன்' கதையின் உரிமையைப் பெற்றார்.
அதன் பிறகு இயக்குனர் மகேந்திரனை அழைத்து அதற்கு திரைக்கதை எழுதச் சொன்னார்; அவரும் எழுதிக் கொடுத்தார். சில இயக்குநர்களை அணுகியபோது இவ்வளவு பெரிய பிரம்மாண்ட படத்தை இயக்க தயங்கினர். இறுதியில் தானே தயாரித்து இயக்குவதாக முடிவெடுத்தார். அதோடு வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் தானே நடிக்கவும் முடிவு செய்தார்.
ஜெமினி கணேசன், வைஜெயந்தி மாலா, பத்மினி, சாவித்ரி, சரோஜா தேவி, நம்பியார், எம்.என்.ராஜம், டி.எஸ். பாலையா உள்ளிட்ட பல நட்சத்திரங்களை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையமைப்பது என்றும், ஜி.கே. சாமு ஒளிப்பதிவு செய்வதென்றும் முடிவு செய்யப்பட்டது. 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' அளிக்கும் 'பொன்னியின் செல்வன்' போஸ்டர்கூட வெளியிடப்பட்டது.
ஒருநாள், காரில் சென்றபோது, எம்.ஜி.ஆருக்கு விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து குணமடைய 6 மாதங்கள் ஆனது. குணமடைந்ததும் தனது படத்தில் நடிப்பதை விட பாதியில் நிற்கும் மற்றவர்களின் படத்தை நடித்து முடித்துக் கொடுக்க விரும்பினார். 'மலைநாட்டு இளவரசன்', 'சிரிக்கும் சிலை', 'சிலம்புக் குகை', 'தூங்காதே தம்பி தூங்காதே' ஆகிய 4 படங்களை நடித்துக் கொடுத்தார். இந்தப் படங்களை நடித்து முடிப்பதற்கு உள்ளாகவே மேலும் நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இதனால் அவரால் பொன்னியின் செல்வன் கதை பக்கம் செல்ல முடியவில்லை.
மீண்டும் நான்கு வருடங்களுக்குப் பிறகு மேலும் பணம் கொடுத்து கதை உரிமையை புதுப்பித்துக் கொண்டார். ஆனாலும் அவரால் பொன்னியின் செல்வன் படத்தை கடைசி வரை இயக்க முடியவில்லை. அவர் ஆசைப்பட்ட வந்திய தேவன் கேரக்டரிலும் நடிக்க முடியவில்லை.