30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு | 3 நாளில் 20 கோடியை அள்ளிய 'தலைவன் தலைவி': மகாராஜா மாதிரி 100 கோடியை தாண்டுமா? | 24 ஆண்டுகளுக்குபின் ஆளவந்தான் நாயகி: விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் நடிக்கிறார் |
ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் அக்ஷய்குமார். ஆனால், அவரது கடந்த சில படங்கள் சுமாரான வசூலைக் கூடப் பெற முடியாமல் மிகவும் தடுமாறி வருகிறது.
மலையாளத்தில் வெளிவந்த 'டிரைவிங் லைசென்ஸ்' படத்தை ஹிந்தியில் 'செல்பி' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்கள். அதில் அக்ஷய்குமார், இம்ரான் ஹஷ்மி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ஆனால், படத்தின் முதல் நாள் வசூலே மிக மிக மோசமாக ஆரம்பமாகியுள்ளது.
நேற்றைய முதல் நாள் இந்தியா வசூலாக அதிக பட்சமாக இரண்டரை கோடி வரைதான் வசூலித்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ஹிந்தித் திரையுலகினரை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
தென்னிந்தியப் படங்களின் தாக்கத்திலிருந்து பாலிவுட் இன்னும் மீளவில்லை. 'பதான்' படம் மூலம் ஷாரூக்கான் மட்டுமே மீண்டுள்ளார் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. ஹிந்தித் திரையுலகத்தினர் கதைத் தேர்வில் இன்னும் அதிகமான கவனம் செலுத்த வேண்டும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.