சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி. ஹீரோ படத்தில் அறிமுகமான இவர் அதன் பிறகு முபர்கான், நவாப்ஸாடே, மோட்டிச்சூர் சிக்கந்சூர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்கவில்லை. என்றாலும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுலை தீவிரமாக காதலித்து வந்தார். இதனை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
மகாராஷ்டிராவில் தற்போது நடைபெற்று வரும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராகுலுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதை பயன்படுத்தி தனது திருமணத்தை அவர் நடத்தியுள்ளார். அதியா ஷெட்டியின் பண்ணை வீட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி குடும்பத்தினர், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். வரவேற்பு நிகழ்ச்சி விரைவில் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்க இருக்கிறது. இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.