விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' | 'பெருசு' முதியவர்களை பெருமைப்படுத்தும் | தாய்மாமன் உறவை பேசும் மாமன் படம் : கோடையில் ரிலீஸ் | பிளாஷ்பேக் : 'டிக் டிக் டிக்' படத்தால் சர்ச்சையில் சிக்கிய பாரதிராஜா | பிளாஷ்பேக் : தியேட்டர்களை கோவிலாக மாற்றிய நந்தனார் | பள்ளி ஆசிரியர்களே என் உயர்வுக்கு காரணம் : பழைய நினைவுகளை பகிர்ந்து நடிகர் ரஜினி உருக்கம் |
கேஜிஎப் படம் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இவர்களுடன் பிரபல நடிகர்கள் ஜெகபதி பாபு, பிரித்விராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து பிரசாந்த் நீலின் அடுத்த படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இதில் கதாநாயகனாக ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். ஜூனியர் என்டிஆர் 31வது படமாக உருவாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் இரு நிறுவங்களும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது . இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம்.
இதை முடித்த பிறகு கேஜிஎப் 3 படத்தை அவர் இயக்குவார் என தெரிகிறது.