இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
பிரபலமான சாதனையாளர்களின் வாழ்க்கையை இயக்குனர்கள் சினிமாவாக இயக்குவார்கள். இப்போது ஒரு இயக்குனரின் வாழ்க்கையே சினிமா ஆகிறது. இந்திய சினிமாவின் மிக முக்கிய இயக்குனராக போற்றப்படுகிறவர் மிருணாள் சென்.
வங்காளம், இந்தி, தெலுங்கு திரைப்படங்களை இயக்கியுள்ள இவர், பத்மபூஷன், தாதா சாகேப் பால்கே உட்பட பல தேசிய விருதுகளைப் பெற்றவர். சர்வதேச திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு மறைந்த இவர் வாழ்க்கைக் கதை இப்போது சினிமாவாகிறது. சிரிஜித் முகர்ஜி இயக்கும் இந்தப் படத்தில் வங்க நடிகர் சஞ்சால் சவுத்ரி, மிருணாள் சென்னாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்குகிறது.
மேற்குவங்க மாநிலத்தின் பரீத்பூரில் 1923ம் ஆண்டு மே 14ம் தேதி பிறந்தவர் மிருணாள் சென். பள்ளிப் படிப்பை சொந்த ஊரில் முடித்தபின் கல்லூரி படிப்புக்காக கோல்கட்டா வந்தார். கோல்கட்டா ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் இயற்பியலும், கோல்கட்டா பல்கலைக்கழகத்தில் முதுகலையும் பயின்றார். இவர் இந்திய பொதுவுடமைக் கட்சியின் கலைப் பண்பாட்டு பிரிவில் பணியாற்றி வந்தார்.
நாடகங்களை இயக்கி வந்த இவர் அதன்பிறகு திரைப்படங்களை இயக்கி, இந்திய திரைப்படங்களை உலகத் தரத்துக்கு உயர்த்தினார். முதன் முதலில் 1955இல் 'ராத் போர்க் என்ற படத்தை இயக்கினார். இப்படம் வெற்றி அடையவில்லை. இரண்டாவதாக 'நீர் ஆகாஷெர் நீச்சேக்' என்ற படத்தை இயக்கினார். இப்படம் இவருக்கு இந்திய அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தது. மூன்றாவதாக 'பைஷே சிரவன்' என்ற படத்தை இயக்கினார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததோடு, இவருக்கு உலக அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.
இவரின் திரைப்படங்கள் நடுத்தர வகுப்பு மக்களின் குடும்பப் பிரச்சினைகளை சித்தரிக்கும் படங்களாக, குறைந்த செலவில் எடுக்கப்பட்டவை . இவர் இயக்கி 1969இல் வெளிவந்த 'புவன் ஷோம்' என்ற திரைப்படம் இவரை உலக அளவிலும் இந்திய அளவிலும் பெரிய இயக்குநராக அடையாளப்படுத்தியது. இத்திரைப்படம் நவீன இந்திய திரைப்பட இயக்கத்தின் முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது. 34 திரைப்படங்கள், 14 குறும்படங்கள் 4 ஆவணப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.