பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக மாறிவிட்டார் ராஷ்மிகா மந்தனா. அடுத்ததாக விஜய்யுடன் அவர் இணைந்து நடித்துள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் அடியெடுத்து வைத்துள்ள ராஷ்மிகா, அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்த குட் பை என்கிற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஆனாலும் பாலிவுட்டில் முதல் படமாக அவருக்கு அதில் வரவேற்பு கிடைக்கவில்லை.
அதேசமயம் அவர் பாலிவுட்டில் முதன்முதலாக நடிப்பதற்காக அடியெடுத்து வைத்த படம் மிஷன் மஞ்சு. சித்தார்த் மல்கோத்ரா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் 2020லேயே அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு கொஞ்சம் தாமதமாகவே நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இந்த படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களால் அதுவும் தடைபட்டது.
இந்த நிலையில் படத்தை தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதால் இந்த படம் நேரடியாக வரும் ஜனவரி-18ல் ஓடிடி தளத்திலேயே வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் வரும் ஜனவரியில் நான்கு நாட்கள் இடைவெளியில் ராஷ்மிகா நடித்த இரண்டு படங்கள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.