'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாலிவுட் நடிகரும் யூடியூப் விமர்சகருமான கமால் ரஷீத் கான் என்பவர் பிரபலங்கள் குறித்து சர்ச்சையான கருத்துகளை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருபவர். பாலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல், மோகன்லால், ரஜினி, அஜித் என தென்னிந்திய முன்னணி நடிகர்களையும் அவர்களது படங்கள் வெளியாகும் சமயத்தில் கிண்டலடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த இவர் தற்போது மோகன்லால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரிஷ்யம்-2 படம் குறித்து கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
இந்தப்படம் பற்றி அவர் கூறும்போது, “பயங்கரம்.. சோனி டிவியில் ஒளிபரப்பாகும் சிஐடி மூசா தொடர் இந்த படத்தை விட நூறு மடங்கு சிறப்பாக இருக்கிறது” என்று கிண்டல் அடித்துள்ளார். கடந்த வருடம் வெளியான திரிஷ்யம்-2 படத்தை இப்போது ஏன் இவர் தேவையில்லாமல் விமர்சித்து சர்ச்சையை கிளப்புகிறார் என்றால், அதற்கு காரணம் அஜய்தேவ்கன் தான்.
ஆம்.. திரிஷ்யம் 2 படத்தின் ஹிந்தி ரீமேக் வெளியாகி உள்ளது. இதில் அஜய் தேவ்கன், ஸ்ரேயா, தபு என இதன் முதல் பாகத்தில் நடித்த நட்சத்திரங்களே மீண்டும் இதில் இடம் பெற்றுள்ளனர். நேரடியாக ஹிந்தியில் வெளியாகி உள்ள திரிஷ்யம்-2 படத்தை விமர்சித்தால் தனக்கு சிக்கல் வருமென நினைத்து, மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் 2 படத்தை தாக்குவது போல இப்படி செய்தி வெளியிட்டுள்ளார் கமால் கான்.
இரண்டும் ஒரே கதைதான் என்பதால் மோகன்லால் படத்தை மட்டமாக விமர்சித்தால் ரசிகர்கள் அதை புரிந்துகொண்டு இந்தியில் வெளியாகியுள்ள திரிஷ்யம்-2 படத்தை பார்க்காமல் புறக்கணிப்பார்கள் என்கிற எண்ணத்தில் இவ்வாறு சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளார் கமால் ரஷீத் கான்.