பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சனுக்கு நேற்று 11வது பிறந்த நாள். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தார்கள்..
ஐஸ்வர்யா ராய் தன் மகளுக்கு அன்முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். "என் லவ்... மை லைப்... ஐ லவ் யூ, மை ஆராத்யா" என்றும் பதிவிட்டிருந்தார். அந்த முத்தம் லிப் லாக் என்பதுதான் பிரச்சினையே.
இப்படி லிப் லாக் முத்தம் கொடுப்பது தவறான வழிகாட்டுதலை உண்டாக்கும். ஐஸ்வர்யா ராய் போன்ற செலிபிரிட்டிகள் செய்யும்போது அதனை எல்லோரும் பின்பற்றுவார்கள் என்று நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஒரு தாய் அன்பை எப்படி வேண்டுமானலும் வெளிப்படுத்த உரிமை உண்டு. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது ஐஸ்வர்யா ராய்க்கு ஆதரவான குரல்களும் எழுகின்றன.
என்னதான் தாயாக இருந்தாலும் அவர் 50 வயதை கடந்த பெண் அவர் குழந்தைகளுக்கு லிப் லாக் முத்தம் தருவது சில உடல்நல பிரச்சினைகளை தரலாம். கன்னம், நெற்றி, உச்சந்தலை இவையே குழந்தைகளை முத்தமிட சரியான இடம் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக் கிறார்கள்.