Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மத கலவரத்தை தூண்டும் தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய கோரிக்கை

10 நவ, 2022 - 12:06 IST
எழுத்தின் அளவு:
Oppose-for-Kerala-story-movie

பாலிவுட் இயக்குனர் சுதிப்போ சென் இயக்கி இருக்கும் படம் தி கேரளா ஸ்டோரி. இந்த படத்தின் கதை கேரளாவில் வாழும் இந்து பெண்ணை முஸ்லிமாக மாற்றி அவரை தீவிரவாதியாக உருவாக்கி, அவள் தற்போது ஆப்கானிஸ்தான் சிறையில் இருப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் முஸ்லிம் உடை அணிந்த ஒரு பெண் பேசுகிறார். என் பெயர் ஷாலினி உன்னி கிருஷ்ணன். நான் பிறப்பால் இந்து. நான் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டேன். தற்போது ஆப்கானிஸ்தான் சிறையில் வாடுகிறேன். இங்கு நான் மட்டும் தனியாக இல்லை. 32 ஆயிரம் பெண்கள் சிறையில் இருக்கிறார்கள். எங்களை யாராவது காப்பாற்றுவார்களா? என்று கேட்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

இந்த படம் கேரள மக்களை அவதூறு செய்வதாகவும், பொய்யான தகவல்களை கொண்டிருப்பதாகவும், மத கலவரத்தை தூண்டும் விதத்தில் இருப்பதாகவும் அதனால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தணிக்கைக் குழுவில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், ஒரு பிரிவினரின் மத உணர்வுகளை புண்படுத்துவது மற்றும் கலவரத்திற்கு அழைப்பு விடுப்பது போன்ற கருப்பொருள் படத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கேரளா டிஜிபி அனில்காந்த் திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனருக்கு வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த படத்தில் முஸ்லிம் பெண்ணாக நடித்திருப்பவர் பாலிவுட் நடிகை அடா சர்மா. இவர் தமிழில் சார்லி சாப்ளின் 2, மற்றும் இது நம்ம ஆளு படத்திலும் நடித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
குறைந்த நாட்களில் நடிக்கும் ஹீரோக்களின் படங்கள் ஒருபோதும் ஓடாது ; போனி கபூர் ஆவேசம்குறைந்த நாட்களில் நடிக்கும் ... பச்சன் ஜாதிப்பெயரா? - தன்னிலை விளக்கம் கொடுத்த அமிதாப் பச்சன் ஜாதிப்பெயரா? - தன்னிலை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

12 நவ, 2022 - 15:55 Report Abuse
அநாமதேயம் உண்மையை சொன்னால் அந்த படத்திற்காக வழக்கு ஆனால் இதை நிஜவாழ்க்கையில் செய்து வருபவர்களுக்கு பணம் கொடுத்து கெடுப்பவர்களுக்கு
Rate this:
12 நவ, 2022 - 09:02 Report Abuse
Tapas Vyas அது உண்மையே-கேரளத்மில் விபசாரமே கொடிகட்டி பறக்கிறது-சிறுவயது ஆதரவற்ற தவறான பொறுப்பற்ற பெற்றோரின் பெண்குழந்தைகள் பருவவயதில் இமுபோன்ற விபசாரக் குழுக்களிடம் பழகி பின்னர் அதுவே தொழிலாகி குறிப்பாக இந்தப் பெட்களை அடிமைப்படுத்தி ஆள்பவரழகள்
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12 நவ, 2022 - 05:02 Report Abuse
J.V. Iyer தடை செய்யவேண்டிய கட்சிகள் இங்கு நிறைய இருக்கின்றன. முதலில் அவைகளை தடைசெய்யவேண்டும்.
Rate this:
Vijay - Chennai,இந்தியா
11 நவ, 2022 - 17:01 Report Abuse
Vijay ஹிந்துக்களுக்கு எதிராக படம் எடுத்தால் படத்தை படமா பாருங்கள் சிறுபான்மையினருக்கு எதிராக படம் எடுத்தால் மத கலவரம் தூண்டுதல்
Rate this:
11 நவ, 2022 - 13:36 Report Abuse
AL..Nachi இது முற்றிலும் உண்மை .....கேரளாவில் நடக்கிறது ....
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in