போனில் மட்டும் பேசு : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு டார்ச்சர் கொடுத்த இயக்குநர் | எதிர்நீச்சல் தொடரில் 10 ஆண்டுகள் கூட நடிப்பேன் : மதுமிதா மகிழ்ச்சி | தீபிகா படுகோனின் ஜிம் மேட்டாக மாறிய ஐஸ்வர்யா மேனன் | 17 வருடங்களுக்கு பிறகு 2ம் பாகத்திற்காக இணைந்த சுரேஷ் கோபி - ஜெயராஜ் | மறுபிறவி ரகசியம் உடைக்கும் 'ஆன்மீக அழைப்பு' | தமிழில் வெளியாகும் ஹாலிவுட் பேய் படம் | மைதான் : அறியப்படாத இந்திய கால்பந்து அணியின் கதை | பிரியங்கா சோப்ராவை துரத்தியது கரண் ஜோஹர்தான்: கங்கனா குற்றச்சாட்டு | வெப் தொடரில் நடிக்கும் பிக்பாஸ் மணிகண்ட ராஜேஷ் | அரசியலுக்கு வரமாட்டேன் : விஜய் சேதுபதி பேட்டி |
பாலிவுட் சினிமாவின் பிக் பி என அழைக்கப்படுபவர் நடிகர் அமிதாப் பச்சன். அவரது மகன் நடிகர் அபிஷேக் பச்சன். இப்படி அவர்களது பெயரின் பிற்பகுதியில் இணைத்துள்ள பச்சன் என்கிற பெயர் ஜாதியை குறிக்கவில்லை என்கிற ஒரு தகவலை தன்னிலை விளக்கமாக கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.
ஹிந்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கோன் பனேகா குரோர்பதி 14-ஆவது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார் அமிதாப் பச்சன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ருச்சி என்கிற பெண் போட்டியாளரிடம் அமிதாப் பேசும்போது, உங்கள் பெயரின் பின்னால் துணை பெயர் எதுவும் இல்லையே.. என்ன காரணம் என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த அந்தப்பெண் துணைப்பெயர் வைத்துக் கொள்ளும்போது அது நமக்கு சாதிரீதியாக ஒரு அடையாளத்தை கொடுத்து விடுகிறது. நம்முடைய முதல் பெயரே நம்முடைய தனித்தன்மையை சொல்வதாக இருக்க வேண்டும். அதனால்தான் எந்த ஒரு துணைப்பெயரையும் சேர்த்துக் கொள்ளவில்லை என்று கூறினார். இதனைத் தொடர்ந்து அமிதாப்பச்சன் தன்னிலை அளிக்கும் விதமாக, தனது பெயருக்குப் பின்னால் பச்சன் என்கிற துணைப்பெயர் எப்படி இனிந்தது என இதுவரை வெளியிடாத ஒரு காரணத்தை கூறினார்.
“பச்சன் என்பது ஒரு ஜாதியின் பெயரோ அல்லது ஒரு சமூகப் பிரிவோ அல்ல.. அது என்னுடைய தந்தையின் செல்லப்பெயர்.. என்னை பள்ளியில் சேர்க்கும்போது, ஆசிரியர் என் தந்தையிடம் என் பெயருக்கு துணைப்பெயர் என எதுவும் இல்லையே என்று கேட்டபோது, பச்சன் என சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். அப்போது இருந்துதான் அமிதாப் பச்சன் என என் பெயர் மாறியது” என்று கூறினார் அமிதாப் பச்சன்.