சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் | ‛குட் பேட் அக்லி' தந்த உத்வேகம்: நெகிழ்ச்சியில் பிரியா பிரகாஷ் வாரியர் | பூங்காவில் உருவான 'பூங்கா' | பிளாஷ்பேக் : 600 மேடை நாடகங்கள், 400 திரைப்படங்கள் : சத்தமில்லாமல் சாதித்த டைப்பிஸ்ட் கோபு | ஸ்ரீக்கு என்ன ஆச்சு? படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் | தனுஷ் குரலில் லீக் ஆன குபேரா பட பாடல்! | ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி? | சீக்ரெட் காக்கும் ஷா | நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி | 'பத்த வைக்கும் பார்வைக்காரி' வைஷ்ணவி |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். அவருக்கும் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான ரன்பீர் கபூருக்கும் இந்த வருடம் ஏப்ரல் மாதம் காதல் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு ஆலியா பட்டின் தாய்மை பற்றி அறிவித்தார் ரன்பீர் கபூர்.
தற்போது ஆலியா பட்டிற்கு வளைகாப்பை நடத்தியுள்ளார்கள். ரன்பீர் கபூர், ஆலியா வசிக்கும் வீட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார் ஆலியா பட். இயக்குனர் கரண் ஜோஹர், நடிகை கரிஷ்மா கபூர் உள்ளிட்டவர்கள் இருவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் பலர் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த வருடத்தில் ஆலியா பட் நடித்து வெளிவந்த ஹிந்திப் படங்களான 'கங்குபாய் கத்தியவாடி, பிரம்மாஸ்திரா', தெலுங்கில் அறிமுகமான 'ஆர்ஆர்ஆர்' வெற்றிப் படங்களாக அமைந்தன. தற்போது 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி, ஹார்ட் ஆப் ஸ்டோன்' ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார் ஆலியா.