''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கடந்த செப்டம்பர் 13ம் தேதி ஈரானில் உள்ள தெஹ்ரான் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து தனது சகோதரர் மற்றும் பிற உறவினர்களுடன் புறப்பட்டுச் சென்ற மஹ்சா என்ற இளம்பெண் ஹிஜாப் அணியவில்லை என்பதற்காக கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலிலேயே அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இந்த சம்பவம் ஈரானிய பெண்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி அது பெரிய போராட்டமாக மாறி இருக்கிறது.
உலகெங்கிலும் உள்ள பெண்கள் ஈரானியப் பெண்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளனர். தங்கள் தலையை மொட்டை அடித்தும், முடியை குறைவாக வெட்டியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆதராவ நடிகை பிரியங்கா சோப்ராவும் களம் இறங்கி இருக்கிறார். போராட்டத்துக்கான லோகோவை வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது:
ஈரான் மற்றும் உலகெங்கிலும் உள்ள பெண்கள் எழுந்து நின்று குரல் எழுப்புகிறார்கள், பகிரங்கமாக தலைமுடியை வெட்டுகிறார்கள் மற்றும் பல வகையான போராட்டங்களை ஈரானிய காவல்துறையால் மிகவும் கொடூரமாக பறித்த மஹ்சா அமினிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. உங்கள் தைரியம் மற்றும் உங்கள் நோக்கத்திற்காக நான் பிரமிக்கிறேன். ஆணாதிக்கத்திற்கு சவால் விடுவது மற்றும் உங்கள் உரிமைகளுக்காக போராடுவது உங்கள் உயிரைப் பணயம் வைப்பது எளிதானது அல்ல. ஆனால், நீங்கள் தைரியமான பெண்கள் இதைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு நாளும் செய்கிறீர்கள். இந்தக் குரல்கள் இனி அமைதியாக இருக்கக் கூடாது. நான் உங்களுடன் நிற்கிறேன்.
இவ்வாறு பிரியங்கா எழுதியிருக்கிறார்.