'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் 80வது பிறந்தநாள் அக்டோபர் 11ம் தேதி அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பிவிஆர் சினிமாஸ் அவர் நடித்த 11 சூப்பர் ஹிட் படங்களை அக்டோபர் 8ம் தேதி முதல் 11ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள 17 நகரங்களில், 22 தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் திரையிடப் போவதாக அறிவித்துள்ளது. அதோடு அந்த படங்கள் குறித்த பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில், தாதா, காலா பட்டர், கலியா, கபி கபி , அமர் அக்பர் அந்தோணி, நமக் ஹலால், அபிமான், தீவார், மிலி, சட்டை பே சத்தா, சுப்கே சுப்கே ஆகிய படங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், டிக்கெட் விற்பனை மற்றும் காட்சி நேரம் போன்ற விவரங்கள் வரும் நாட்களில் வெளியிடப்பட உள்ளது. இதனால் அமிதாப்பச்சனின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்து இருக்கிறார்கள்.