ஒரே நாளில் இரண்டு 'சர்ப்ரைஸ்' கொடுத்த சமந்தா | பூரண குணமடைந்து வீடு திரும்பினார் விஜயகாந்த் | காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' |
தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற படமான 'விக்ரம் வேதா' அதே இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி இயக்க ஹிந்தியில், ஹிருத்திக் ரோஷன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிக்க ரீமேக் ஆகி கடந்த வாரம் வெளியானது.
படத்தைப் பார்த்த பல விமர்சகர்களும் படத்தை ஆஹா, ஓஹோவெனப் பாராட்டினார். 5க்கு 4 ரேட்டிங் எல்லாம் கொடுத்தார்கள். ஆனாலும், படத்தின் வசூல் விமர்சனங்களின் பாராட்டுக்களுக்கு ஏற்றபடி அமையாதது பாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல் வார இறுதியில் இப்படம் சுமார் 40 கோடி வரை வசூலித்துள்ளதாக பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் நாளில் 11 கோடி, இரண்டாம் நாளில் 13 கோடி, மூன்றாம் நாளில் 15 கோடி வரை வசூலித்துள்ளதாம். இவ்வளவு குறைவான வசூல் இப்படத்திற்குக் கிடைக்கும் என பாலிவுட்டில் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். நவராத்திரி பூஜையால் குடும்பத்தினர் தியேட்டர்கள் பக்கம் வராமல் இருப்பதும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.