பிளாஷ்பேக் : ஓவிய நாயகன் ஒளியின் நாயகனான பின்னணி | திரிசூலம், சூர்யவம்சம், விக்ரம் - ஞாயிறு திரைப்படங்கள் | ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது |
பாலிவுட்டில் 70களில் ஒரு கலக்கு கலக்கியவர் பர்வீன் பாபி. 1973ம் ஆண்டு வெளிவந்த 'சரித்ரா' படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து 'தீவார், அமர் அக்பர் ஆண்டனி, சுஹாக், மேரி ஆவாஸ் சுனோ, காலியா, நமக் ஹலால், குத் தார், ஜானி தோஸ்த்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.
அவரது காலத்தில் கிளாமர், கவர்ச்சி என இளம் ரசிகர்களைக் கிறங்கடித்தவர். சில பல காதல்களால் பரபரப்பாகப் பேசப்பட்டவர். கடந்த 2005ம் ஆண்டு அவரது மும்பை பிளாட்டில் இறந்து கிடந்தார். அவர் இறந்து நான்கு நாட்களுக்குப் பிறகே அவரது மரணம் பற்றி தெரிய வந்தது.
மும்பை ஜுஹு கடற்கரைப் பகுதியில் உள்ள ரிவியரா பில்டிங்கின் 7வது மாடியில் அவருக்குச் சொந்தமான அந்த பிளாட் உள்ளது. அதை விற்பதற்கு தற்போது முயன்று வருகின்றனர். ஆனால், அந்த பிளாட்டை வாங்க யாரும் முன் வரவில்லையாம். பர்வீன் பாபி உடல்நலக் குறைவால் இயற்கையாக மரணம் அடைந்தாலும் அந்த வீட்டில் “ஏதோ ஒன்று” இருப்பதாக பயந்து வாங்க மறுக்கிறார்களாம். இது பற்றிய செய்திகள் மும்பை ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விலைக்கு என்றால் 15 கோடியும், வாடகைக்கு என்றால் மாதம் 4 லட்ச ரூபாயும் என்று புரோக்கர்கள் நிர்ணயித்துள்ளார்களாம்.