என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

துல்கர் சல்மான் சமீபத்தில் தெலுங்கில் நேரடியாக நடித்த சீதாராமம் திரைப்படம் வெளியானது. இந்த படம் தெலுங்கு மட்டுமல்லாது மற்ற தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாகி, அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. படம் பார்த்த அனைவருமே இது ஒரு பீல்குட் படம் என்று பாசிட்டிவான விமர்சனங்களை முன் வைத்தார்கள். இதைத்தொடர்ந்து இந்த படம் தற்போது ஹிந்தியிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இது தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் துல்கர் சல்மான் படத்தின் கதாநாயகி மிருணாள் தாக்கூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் துல்கர் சல்மானிடம் பேசும்போது இந்த படத்தில் உங்களது நடிப்பை பார்க்கும்போது பல வருடங்களுக்கு முன்பு வீர் சரா என்கிற படத்தில் ஷாருக்கான் நடித்ததை பார்ப்பது போன்றே இருக்கிறது என்று புகழ்ந்தார்கள். உடனே அவர்களை இடைமறித்த துல்கர் சல்மான் தயவு செய்து ஷாருக்கானுடன் என்னை ஒப்பிட்டு பேச வேண்டாம் அது அவரை இன்சல்ட் செய்வது போலாகிவிடும். அவரது உயரத்தை அடைவதற்கு எனக்கு இன்னும் பல காலம் தேவைப்படும் என்று தன்னடக்கத்துடன் பதிலளித்தார்.