'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ், தெலுங்கில் சில வருடங்கள் முன்பு வரை முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் தமன்னா. கடந்த சில வருடங்களாக அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் வெற்றிப் படங்களில் நடித்தவர் தமன்னா.
தற்போது அவர் ஹிந்தியில் சில படங்களில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியில் நடித்துள்ள 'பப்லி பவுன்சர்' என்ற படம் இந்த வாரம் செப்டம்பர் 23ம் தேதி ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளது.
இப்படத்தை ஹிந்தியில் 'சாந்தினி பார், பேஜ் 3, கார்ப்பரேட், பேஷன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய மதுர் பண்டார்கர் இயக்கியுள்ளார். படம் பற்றியும், தமன்னா பற்றியும் அவர் சுவாரசியத் தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
“தமன்னா மிகவும் கடின உழைப்பாளி, திறமைசாலி. அவர் இதற்கு முன்பு நடித்த படங்களை நான் பார்த்ததில்லை. 'பாகுபலி' படத்தையும் சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததால் ஞாபகமில்லை. ஒரு நடிகையைப் பார்க்கும் போது அவர் எனது கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருப்பாரா என்றுதான் பார்ப்பேன். அப்படி தமன்னாவைப் பார்த்த போது அவர் எனது பப்லி கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருப்பார் என நினைத்தேன். நிஜ வாழ்க்கையில் நான் காமெடியான ஒரு மனிதன். ஆனால், 'சாந்தினி பார்' படத்திற்குப் பிறகு எல்லோரும் என்னை 'டார்க் சினிமா' மட்டுமே எடுப்பேன் என நினைக்க ஆரம்பித்தார்கள். இந்தப் படத்தில் தமன்னா வந்ததும், நகைச்சுவைப் படமாக எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்,” என்று தெரிவித்துள்ளார்.