ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தற்போது அட்லி இயக்கும் ஜவான் என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் தீபிகா படுகோனே, நயன்தாரா, யோகி பாபு என பலர் நடிக்க, அனிருத் இசை அமைக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 5 மொழிகளில் இப்படம் உருவாகிறது. இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இதே ஸ்டுடியோவில் ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பும் நடைபெற்று வருவதால் ரஜினியும், ஷாருக்கானும் நேரில் சந்தித்துக்கொண்ட தகவல்கள் நேற்றைய தினம் வெளியானது.
இந்த நிலையில் தற்போது ஜவான் படம் குறித்து இன்னொரு ஆச்சரிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த படத்தின் ஒரு சண்டை காட்சியில், 200 பெண் ஸ்டன்ட் கலைஞர்களுடன் ஷாரூக்கான் மோதுவது போன்று ஒரு பிரமாண்ட காட்சியை படமாக்கி இருக்கிறார் அட்லீ. இந்த காட்சியில் சண்டை செய்யும் 200 ஸ்டன்ட் கலைஞர்களும் மும்பையில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள் .