''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
பெங்களூருவை சேர்ந்த பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர். தொழில் அதிபர் ஒருவரை மிரட்டி 200 கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த மோசடிக்கும் நடிகையும், சுகேஷின் காதலியுமான ஜாக்குலின் பெர்ணாண்டசுக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கு பதில் அளித்து ஜாக்குலின் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: சுகேஷ் சந்திரசேகரின் மோசடி வலைக்குள் நான் சிக்க வைக்கப்பட்டுள்ளேன். அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறேன். என்றாலும் அதிகாரிகள் என்னை பாதிக்கப்பட்டவளாக பார்க்காமல், குற்றவாளியாக பார்க்கிறார்கள். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. நான் இந்த விவகாரத்தில் ஏமாற்றப்பட்டிருக்கிறேன். சிக்க வைக்கப்பட்டிருக்கிறேன். இதனை அதிகாரிகள் ஏற்க மறுக்கிறார்கள். சுகேஷிடம் நான் மட்டும் பரிசு பொருட்கள் வாங்கவில்லை. என்னைபோல வேறு சில நடிகைகளும் வாங்கி உள்ளனர். அவர்கள் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். என்னை மட்டும் குற்றவாளி பட்டியலில் சேர்த்துள்ளனர்.
இது விசாரணை அதிகாரிகளின் உள்நோக்கம் கொண்ட பாரபட்ச நடவடிக்கை. என்னிடம் அதிகாரிகள் பறிமுதல் செய்த பணம். சுகேஷ் எனக்கு அறிமுகமாவதற்கு முன்பே நான் சம்பாதித்த பணம். அவற்றை திருப்பித் தரவேண்டும். இவ்வாறு ஜாக்குலின் தனது மனுவில் தெரிவித்திருக்கிறார்.