படத்தில் நடிக்கும் அனைவருக்கும் 'ஸ்கிரிப்ட்' கொடுக்க வேண்டும்: விக்ரம் பிரபு வேண்டுகோள் | நாயகியான செய்தி வாசிப்பாளர் | புதிய கதையில் வெளிவரும் 'ஜூராசிக் பார்க்' | பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் ஆட மறுத்த சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக்: எம்ஜிஆரை வாடா, போடா என்று அழைத்த ஒரே இயக்குனர் | 'குபேரா' முதல் நாள் வசூல்: முதற்கட்டத் தகவல் | 'ஆர்ஜேபி' என பெயரை சுருக்கிய ஆர்ஜே பாலாஜி | முன்னாள் கணவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கரிஷ்மா கபூர் | 'பராசக்தி' படப்பிடிப்பு விரைவில் மீண்டும் ஆரம்பம்? | விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்துக்கு யு/ஏ சான்றிதழ்! |
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் படங்கள் சீரான இடைவெளியில் தொடர்ந்து வெளியாகி வந்தாலும் வரிசையாக தோல்வியை தழுவி வருகின்றன. இதனால் அப்செட்டாகி இருக்கும் அக்சய் குமார் தனது சம்பளத்தை கூட அடுத்தடுத்த படங்களுக்கு குறைத்துக் கொண்டார் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் அடுத்ததாக தான் நடித்துள்ள ரக்சா பந்தன் படத்தின் ரிலீஸை ரொம்பவே எதிர்பார்க்கிறார் அக்சய் குமார். அதற்காக இப்போதே இந்தப்படத்தின் புரமோஷனில் இறங்கிவிட்டார். இந்தநிலையில் அதன் ஒரு பகுதியாக ரசிகர்களிடம் சோசியல் மீடியாவில் உரையாடிய அக்சய் குமாரிடம் ரசிகர் ஒருவர் மலையாளத்தில் நீங்கள் எப்போது நடிக்கப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்
அதற்கு பதிலளித்த அக்சய் குமார், “எனக்கும் மலையாளத்தில் நடிக்க விருப்பம் தான். ஆனால் எனக்கு மலையாளம் பேச வராது என்று கூறியுள்ளார். அதேசமயம் எனக்கு பதிலாக யாரும் டப்பிங் பேசுவதில் எனக்கு விருப்பமில்லை என்றும், நானே பேசுவது தான் எனக்கு பிடிக்கும் என்று அவர் பதில் அளித்துள்ளார்.
மேலும் தமிழில் ரஜினியுடன் இணைந்து நடித்துவிட்டேன்.. கன்னடத்திலும் நடித்துவிட்டேன். அதேபோல மலையாளத்தில், அதுவும் மோகன்லாலுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்” என கூறியுள்ள அக்சய் குமார் தனது விருப்பம் குறித்து இயக்குனர் பிரியதர்ஷினிடம் தெரியப்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மலையாளத்தில் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனராக இருக்கும் பிரியதர்ஷன், ஹிந்தியில் அதிகப்படியான படங்களை அக்சய் குமாரை வைத்து தான் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.