பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் | பிளாஷ்பேக் : ஹிந்திப் படத்தை ரீமேக் செய்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக் : காணாமல் போன 'கண்ணின் மணிகள்' | நீதிமன்ற தீர்ப்பு எனக்கு ஆச்சர்யமளிக்கவில்லை : நடிகை அறிக்கை | அவதார் 3 ரிலீஸ் : ஒதுங்கும் தமிழ்ப் படங்கள் | விஜயகாந்தின் நல்ல மனசு : சரத்குமார் உருக்கம் | அப்பா ரஜினி படத்தை இயக்குகிறேனா? : மகள் சவுந்தர்யா சொன்ன பதில் | இளையராஜாவும், யுவுனும் இணைந்து பாடிய அம்மா சென்டிமென்ட் பாடல் | பொங்கலுக்கு இத்தனை பான் இந்தியா படங்கள்? தாங்குமா தியேட்டர்கள் ? | வார்த்தை விட்டு மாட்டிக்கொண்ட ராதிகா ஆப்தே! |

டாப்ஸி நடித்துள்ள இந்திப் படம் துபாரா. இந்த படத்தை அனுராக் காஷ்யப் இயக்கி உள்ளார். வருகிற 19ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடந்து வருகிறது. இதில் டாப்ஸி கலந்து கொண்டு வருகிறார்.
மும்பையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு டாப்ஸி தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அங்குள்ள போட்டோகிராபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த டாப்ஸி "எனக்கு சொல்லப்பட்ட நேரத்திற்கு நான் வந்திருக்கிறேன். நான் தாமதாக வந்ததாக எப்படி நீங்கள் கூறலாம்" என்றார். இதனை டாப்ஸி கோபகமாகவும் பேசினார்.
இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு டாப்ஸியும் கோபமாக பதிளித்தார். சில நிமிடங்கள் கடும் வாக்குவாதம் நடந்தது. பின்னர் பேசிய டாப்ஸி "நான் கேமரா முன்னால் நிற்கிறேன். இதுதான் நாளை வெளியில் வரும், கேமராவுக்கு பின்னால் நிற்கும் உங்கள் செயல்பாடு வெளியில் வராது. நீங்களும் கேமராவுக்கு முன்னால் வந்து பேசுங்கள்" என்றார்.
இதற்கிடையில் விழா ஏற்பாட்டாளர்கள் இரு தரப்பையும் சமாதானம் செய்து வைத்தனர்.