'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக இயங்குகிறவர். கங்கனா ரணவத் போன்று பரபரப்பான கருத்துகளை வெளியிடுகிறவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு "தீவிரவாதிகளின் அட்டகாசம் ஆப்கானிஸ்தானில் பொறுத்துக்கொள்ள முடியாத அளவில் இருப்பதுபோலத்தான், இங்கேயும் இந்தியாவில் இந்துத்துவ தீவிரவாதமும் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கிறது"என்று தெரிவித்திருந்தார் . இந்த கருத்து கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதேபோல போதை வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டபோது அவருக்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்தவரும் இவர்தான். ஆர்யன்கான் நிரபராதி அவருக்கு எதிராக சதிவலை பின்னப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஸ்வரா பாஸ்கர் திடீரென மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தனக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளதாக புகார் அளித்துள்ளார். அந்த கடிதத்தையும் போலீசில் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.