போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
பிரபல ஹிந்தி தொலைக்காட்சி நடிகை உர்பி ஜாவேத். சந்திர நந்தினி, மேரி துர்கா, ஜில்மா, தயான், ஹே மேரே ஹம்சர்ப் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறார். சில திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார்.
உர்பி ஜாவேத் சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். தனது கவர்ச்சியான படங்களை வெளியிட்டு லட்சக் கணக்கில் பாலோயர்ஸ்களை வைத்துள்ளார். அவ்வப்போது அதிரடியான கருத்துக்களையும் வெளியிடுவார். இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை பற்றி அவதூறான கருத்து ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார்.
இதற்கு அந்த சமூகத்தை சேர்ந்த சிலர் உர்பி ஜாவேத்துக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டுள்ளனர். இன்னும் சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதற்கு பதிலளித்துள்ள உர்பி ஜாவேத், "நீங்கள் உங்களது நேரத்தை சிறையில் அனுப்பவிக்க வேண்டியிருக்கும்" எனக்கூறி கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட பதிவுகளை ஸ்கீரின் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து தனக்கு எதிராக வரும் கொலை மிரட்டல் பதிவுகள் குறித்து மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.