சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
நடிகர் பிரபாஸ் நடித்திருக்கும் ராதே ஷ்யாம் படம் வரும் மார்ச் 11ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், பாலிவுட்டில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபாஸ்-க்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். பிரபாஸ் உடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சனும் நடிக்க சம்மதித்திருக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை.
இதன் முதல்நாள் படப்பிடிப்பில் அமிதாப் கலந்து கொண்டதை மிகவும் மகிழ்ச்சியோடு நினைவுபடுத்தி, ‛அமிதாப் பச்சனோடு நடிப்பது எனக்கு கனவுபோல் இருக்கிறது' என்று தெரிவித்துள்ளார் பிரபாஸ்.
அமிதாப் பச்சனும், ‛முதல் நாள்.. முதல் ஷாட்.. 'பாகுபலி' பிரபாஸுடன் முதல் படம். அவருடைய ஆரா, திறமை மற்றும் அதீத பணிவு ஆகியவற்றுடன் பணிபுரிவதில் எனக்கு பெருமிதம்' என கூறியுள்ளார்.