'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
மும்பை : ஹிந்தி நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகியோர் பார்ட்டிக்கு போய்விட்டு திரும்பிய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரீனாவின் வீட்டிற்கு மும்பை சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
பாலிவுட்டின் அடிக்கடி பார்ட்டி கலாச்சாரம் நடக்கும். சமீபத்தில் நடந்த ஒரு பார்ட்டியில் நடிகைகள் கரீனா கபூர், கரீஷ்மா கபூர், அம்ரிதா அரோரா உள்ளிட்டோர் சென்றுள்ளனர். தொடர்ந்து இயக்குனர் கரண் ஜோகர் வைத்த பார்ட்டியிலும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் நடிகைகள் கரீனா, அம்ரிதா ஆகியோருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கரீனா கூறுகையில், ‛‛எனக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்று கண்டறிந்ததும் என்னை நானே தனிமைப்படுத்தி உரிய நெறிமுறைகளுடன் சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். என் குடும்பத்தில் உள்ள பணியாளர்கள் உட்பட அனைவரும் இரண்டு முறை தடுப்பூசி போட்டுள்ளனர். தற்சமயம் அவர்களுக்கு நோய் தொற்று எதுவும் இல்லை. சீக்கிரம் இதிலிருந்து மீண்டும் வருவேன்'' என்றார்.
கரீனா கலந்து கொண்ட பார்ட்டியில் பங்கேற்ற மேலும் சிலருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பார்ட்டியில் பங்கேற்றவர்களின் விபரங்களை மும்பை சுகாதாரத்துறையினர் சேகரித்து அவர்களுக்கு பரிசோதனை செய்து வருகின்றனர். இதில் சிலருக்கு நோய் தொற்று பாசிட்டிவ் என்றும் சிலருக்கு நெகட்டிவ் என்றும் வந்துள்ளது. நோய் தொற்று பாதித்த பிரபலங்களின் வீடுகளுக்கு மும்பை சுகாதாரத்துறையில் சீல் வைத்து வருகின்றனர். அந்தவகையில் மும்பையில் நடிகை கரீனாவின் அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் கரீனா இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளார்.
உருமாறிய கொரோனா இப்போது ஒமைக்காரன் வடிவில் மெல்ல பரவி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் அனைவரும் பாதுகாப்பாக, பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதை விடுத்து இப்படி பார்ட்டி என பல இடங்களுக்கு சம்பந்தப்பட்ட திரையுலகினர் சென்று வந்ததால் மேலும் பலருக்கு பரவும் அபாயம் உள்ளது.