‛ரைட்டர் பத்மபூஷன்' படம் பாருங்கள் ; சிபாரிசு செய்யும் மகேஷ்பாபு | பதான் இயக்குனருடன் சேர்ந்து பிரபாஸ் - ஹிருத்திக் படத்தை புதுப்பிக்கும் புஷ்பா தயாரிப்பாளர்கள் | தரக்குறைவாக விமர்சித்த நெட்டிசன்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி | படிப்பை விற்காதீர்கள்: தனுஷ் | மீண்டும் ஒரு ‛லக்கி மேன்' : ஹீரோவாக யோகி பாபு | பணிவாக இருங்கள், பெற்றோருக்கு முக்கியத்துவம் கொடுங்க : மாணவர்களுக்கு நயன்தாரா அட்வைஸ் | 'உன்னோட நடந்தா' பாடல் அனுபவத்தைக் கூறும் சுகா | அமெரிக்க வசூல் - இரண்டாம் இடத்தைப் பிடித்த 'பதான்' | ரஜினி படங்கள், கின்னஸ் சாதனை படத்தை எடுத்த தயாரிப்பாளர் காலமானார் | பிப்ரவரி 18ல் சிம்புவின் ‛பத்து தல' படத்தின் இசை விழா |
1983ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக உலக கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. இதை தழுவி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் 83 என்ற படம் உருவாகியுள்ளது. கபில்தேவ்வாக ரன்வீர் சிங், ஸ்ரீகாந்த்தாக ஜீவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கபீர்கான் இயக்கி உள்ளார்.
கொரோனா பிரச்னையால் தடைப்பட்டு நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ம் தேதி படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. ‛3டி'யிலும் இப்படம் வெளியாகிறது. மேலும் இப்படத்தின் டிரைலர் நவ.,30ல் வெளியாகிறது.