பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் சின்ன பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'ஹெலன்'. மாத்துக்குட்டி சேவியர் என்பவர் இந்தப்படத்தை இயக்கி இருந்தார். அன்னா பென் என்பவர் கதாநாயகியாக நடித்திருந்தார். இதன் தமிழ் ரீமேக்கில் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்க, அன்பிற்கினியாள் என்கிற பெயரில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் இந்த வருடம் வெளியானது.
இந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இன்னொரு பக்கம் இந்தப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'மிலி'யில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். மலையாளத்தில் ஹெலனை இயக்கிய மாத்துக்குட்டி சேவியரே ஹிந்தியிலும் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார்.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளார் ஜான்வி கபூர். “இப்படிப்பட்ட அற்புதமான ஒரு இயக்குனருடன் இணைந்து பயணித்தது நல்ல அனுபவம்” என அவருக்கு நன்றி கூறியுள்ளார் ஜான்வி கபூர்.
அதேபோல மாத்துக்குட்டி சேவியரும், ஜான்வி கபூர் சிறப்பாக ஒத்துழைத்து நடித்ததை பாராட்டும் விதமாக, ‛‛நீங்கள் இல்லையென்றால் நான் ரொம்பவே கவலைப்பட்டு போயிருப்பேன்.. நீங்கள் எனக்காக செய்த எல்லாவற்றுக்கும் நன்றி.. இதை ஒருபோதும் மறக்க மாட்டேன் நன்றி'' என தெரிவித்துள்ளார்.