'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

பாலிவுட்டில் அக்சய் குமார், கத்ரினா கைப் நடிப்பில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள சூர்யவன்ஷி படம் கடந்த வெள்ளியன்று தியேட்டர்களில் வெளியானது. ரோஹித் ஷெட்டி படம் என்றாலே எப்போதுமே ஆக்சன் புல் மீல்ஸாகவே இருக்கும்.. அதேபோல இந்தப்படத்தின் சண்டை காட்சிகளும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இந்தநிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அமிதாப் பச்சன் நடத்தி வரும் கோன் பனேஹா குரோர்பதி சீசன்-13 நிகழ்ச்சியில் அக்சய், காத்ரீனா மற்றும் ரோஹித் ஷெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது படத்தில் இடம்பெற்றுள்ள சில சண்டை காட்சிகளின் கிளிப்புகள் திரையிட்டு காட்டப்பட்டன. குறிப்பாக அக்சய் குமார் ஹெலிகாப்டரில் தொங்கியபடி நடித்திருந்த ஒரு காட்சியை பார்த்ததும் அமிதாப் அதிர்ந்து போனார். அந்த காட்சியை படமாக்கியபோது அக்சய் எடுத்த ரிஸ்க் குறித்து ரோஹித் ஷெட்டி அமிதாப்பிடம் விளக்கினார். அவர்களது முயற்சியை அமிதாப் பாராட்டினாலும், இனி இதுபோன்ற அபாயகரமான சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுக்க கூடாது என அக்சய் குமாரை உரிமையுடன் எச்சரிக்கவும் செய்தார்.