அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
மும்பையில் சொகுசுக் கப்பலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன்கான் உட்பட பலர் கைது செய்யப்பட்டார்கள். அதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட ஆரியன்கானுக்கு சில வாரங்களாக ஜாமீன் இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. மேலும் ஆரியன்கானை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே என்பவரு க்கு ரூ 8 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நவாப் மாலிக் குற்றம் சாட்டியிருந்தார்.
அதையடுத்து அந்த போதைப்பொருள் வழக்கில் இருந்து விசாரணை அதிகாரி சமீர் வான்கடே நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் வான்கடே வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் அதனை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ஆரியன்கான் உள்ளிட்ட 6 வழக்குகள் குறித்த விசாரணை டில்லியில் உள்ள சிறப்பு விசாரணைக் குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கினை சிபிஐ அல்லது என்ஐஏ விசாரிக்க உத்தரவிட கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் தான் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ள வான்கடே, தன்னை பணியிடமாற்றம் செய்யவில்லை என்றும் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.