எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு |
பாலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். சமீபத்தில் அவரது மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டுள்ளது. ஷாருக்கான் தன் மகன் மீது கவனம் வைத்து வளர்க்கவில்லை என அவரது ரசிகர்களிடையே ஒரு பிரிவினர் அவரை குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஷாருக்கான் போலவே உருவ ஒற்றுமை கொண்ட ராஜு என்பவருக்கும், ஹைதர் மக்பூல் என்பவருக்கும் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
இவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஷாருக்கான் போலவே நடித்து ஆடி பார்வையாளர்களை கவர்ந்து அதன் மூலம் வருமானம் சம்பாதித்து வந்தார்கள். இந்த நிலையில் ஆர்யன்கான் விவகாரத்தில் ஷாருக்கான் தற்சமயம் நெகட்டிவ் கமெண்டுகளை சந்தித்து வருவதால் இந்த இருவரையும் தங்களது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறி விட்டனராம். கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கில் இருந்து தற்போதுதான் மீண்டும் வருமானம் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில் இது என்னடா புது சோதனை என இருவரும் புலம்பி வருகின்றனர்.