50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு | ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி |
கொரோனா பிரச்சினையில் இருந்து உலகம் இன்னமும் மீண்ட பாடில்லை. கொரோனா தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால், இப்பிரச்சினை எப்போது தீரும் என்றும் தெரியவில்லை. இதனால் மற்ற துறைகளைப் போலவே திரைத் துறையும் பாதிக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்தது தான்.
அதிலும் குறிப்பாக பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் தான் அதிக பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறதாம். கொரோனா பயத்தால் பலர் படப்பிடிப்புக்கு வரத் தயக்கம் காட்டி வருகிறார்கள். சமீபத்தில் பிரதர் படத்தின் படப்பிடிப்பு கொரோனா பிரச்சினையால் நிறுத்தப்பட்டது. மீண்டும் எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்பது தெரியவில்லை.
இந்த சூழ்நிலையில் பிரமாண்ட படமொன்றில் நடித்து வரும் நாயகனும் இப்போதைக்கு படப்பிடிப்பிற்கு வரமுடியாது எனத் தெரிவித்து விட்டாராம். ஏற்கனவே மற்றொரு களத்தில் பரபரப்பாக இயங்கி வரும் அவர், தேவையில்லாமல் படப்பிடிப்புகளுக்குச் சென்று உடல்நிலையைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என முன்னெச்சரிக்கையாக இப்படி முடிவெடுத்து விட்டார் போலும்.
ஆனால் இயக்குநர் அப்படியில்லை. இந்தப் படத்தால் வேறு படங்களில் ஒப்பந்தமாக முடியாமல் தவித்து வந்தார். அதனால்தான் நாயகன் இல்லாமல் உடனடியாக படப்பிடிப்பைத் தொடங்க தயாரிப்பு முடிவு செய்து விட்டதாம்.